கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள். மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்பி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
-கிராந்தி குமார் பாடி, மாவட்ட ஆட்சித்தலைவர், கோயம்புத்தூர்.
-MMH.
Comments