காமநாயக்கன்பட்டி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் நடவடிக்கை எடுக்குமா மின்சாரதுறை ???

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்துத் எட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் அதன் உறுதி தன்மையை இழந்து காணப்படுகிறது.




நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து பலமுறை மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்,  இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கிராமத்தை சேர்ந்த அருள் விளக்கம் அளித்தார். 

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த 

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

-முனியசாமி.

Comments