ஆல் பிஸினஸ் வுமன்ஸ் அஸோஸியேசேன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய புதிய தொழில்புரிவோருக்கான தொழில் பயிற்சிகள் ...
இங்கு கல்லூரி மாணவிகளுக்கு, இல்லத்தரசிகளுக்கு கடந்த 1 மாதமாக இலவச தையல் பயிற்சி நடத்தப்பட்டது.இதில் பயிற்சியை முடித்த சுமார் 25க்கும் மேற்பட்டோருக்கு ஆல் பிஸினஸ் வுமன்ஸ் அஸோஸியேசேன் நிறுவனர் லயன் டாக்டர்.ராதா பெல்லன்,மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் கருணாகரன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர் சோபனா செல்வம்,தாரா பிரசாந்த், மைதிலி,இந்திரா,அனுராதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பேசிய ஆல் பிஸினஸ் வுமன்ஸ் அஸோஸியேசேன் நிறுவனர் லயன் டாக்டர்.ராதா பெல்லன்,
இனி வரும் காலங்களில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளி மகளிர் ஆகியோருக்கு இலவச தையல் பயிற்சியுடன் டிஜிட்டல் மார்க்கெட்டிங், பியூட்டிஷியன், கைவினைப் பொருட்கள், சோப் தயாரித்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளதாகவும்,மேலும் அவர்களுக்கு பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் ஏற்கனவே போடப்பட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் வேலை வாங்கி தர உள்ளதாகவும்,பயிற்சி பெற்ற மகளிர்கள்,உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான உதவிகள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments