கார் விபத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றவர்கள் ஒருவர் பலி??


கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிகமாக கேரளா வருவது வழக்கம். அவ்வாறு சென்னையில் இருந்து நான்கு பேர் கொண்ட குழு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு  காரில் வந்துள்ளனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


கொட்டரைகரை  திண்டுக்கல் தேசிய நெடுசலையில் பீரிமேடு அருகே குட்டிகாணம்  I H R D கல்லூரி அருகில் டெம்போ மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் காரில் வந்த சென்னை தாம்பரத்தை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் மரணம் அடைந்தார். 

சென்னையிலிருந்து சபரிமலை சென்று திரும்பி வரும் வழியில் குமுளியிலிருந்து ஆலப்புழை நோக்கி சென்றுகொண்டிருந்த டெம்போ டிராவலர் காலை பத்துமணியளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம் அடைந்தார். உடன் பயணித்த மூன்று நபர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். மூவரும் உடனடியாக பீரிமேடு தாலுகா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன். 

மூணாறு.

Comments