விழிப்புணர்வு ரோட்ஷோ தொடங்கியது!!

 

கோவையில் இந்திய ஜவுளி பாரம்பரிய கலாச்சாரம் மேம்பட,  டெல்லியில்,பாரத் டெக்ஸ் 2024- ஐவுளி கலாச்சார கண்காட்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ரோட்ஷோ தொடங்கியது.

புது டெல்லியில்,பாரத் மண்டபம், யஷோபூமியில் ஜவுளி கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வு  கண்காட்சி, 2024,பிப்ரவரி, 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது, இதனை விளம்பரத்தும் விதமாக,கோவையில் முதல் ரோட்ஷோ மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு

இந்தியாவின் தமிழகத்தில் இதன் முதல் விழிப்புணர்வு தொடக்க விழாவாக    கோவை அவினாசி சாலை நட்சத்திர ஓட்டலில் விழிப்புணர்வு  ரோட்ஷோ, ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தியாவில் பெரும் ஜவுளி நிகழ்வாக பாரத டெக்ஸ் 2024 கவுண்டவுன் தொடங்கியது, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலிங் கூட்டமைப்பால் வருகின்ற 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி 29ஆம் தேதி வரை புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்  கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தின் பெருமை, பன்முக தன்மையை பறைசாற்றும்  மையமாக  நடத்தப்படுகிறது, 

தமிழகம், திருப்பூர் ஜவுளித்துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது  பாரம்பரிய மற்றும் புதுமைகளின் அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்றனர், 

இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்களும் மத்திய ஜவுளி அமைச்சகத்துடன் கைகோர்த்து வருவதால் 2024 இல் நடைபெற இருக்கும் மாபெரும் கண்காட்சிக்கு ஒரு முன்னோட்டமாக  இந்த ரோட்ஷோ  விளங்கியது.

இந்தியாவின் ஜவுளித்துறையின் சிறப்பை உலகெங்கிலும் உள்ள ஜவுளித்துறை தலைவர்கள், வடிவமைப்பாளர்கள், பிரதிநிதிகள், ஜவுளி ஆர்வலர்களை ஒருங்கிணைத்து பாரத டெக்ஸ்  இக்கண்காட்சி சர்வதேச ஜவுளி சந்தையில் முன்னணி பெற உதவும் என்றார்கள், 

தமிழக கைத்தறி அமைச்சர் காந்தி பேசுகையில்;

தமிழகத்தின்  கைத்தறி பிரமாண்டமான ஜவுளி கண்காட்சியில் தமிழகத்தின் புகழ் பாரம்பரியம்,கலாச்சாரத்தை பறை சாற்றும்,கைவினைத்திறன்,உலகில் உயர்ந்து நிற்கும் எனறார்.

-சீனி, போத்தனூர்.

Comments