நாம் தமிழர் கட்சி சார்பில் 87 ஆவது வ.உ.சி நினைவு தினம் அனுசரிப்பு!!
தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி ஓட்டப்பிடாரத்தில் வ.உ_சிதம்பரனார் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் தாமஸ் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சமூக நல்லிணக்க உறுதுமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது செய்தி தொடர்பாளர் புவனேந்திரன், மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் தேவராஜ், ஒன்றிய தலைவர் சுடலைமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.
Comments