கோவை குஜராத் சமாஜ் அரங்கில் நவராத்திரி மேளா!!

கோவை குஜராத் சமாஜ் அரங்கில் நவராத்திரி மேளா விற்பனை கண்காட்சி நடைபெற்றது. எச்.ஐ.வி.பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இதில்,பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவையில் ஏ.பி.சி.டி.பவுண்டேஷன் எனும் தன்னார்வ அமைப்பை பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் இணைந்து நடத்தி பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில்  ஏ.பி.சி.டி.பவுண்டேஷன் மற்றும் பேஸ் (PACE) ஈவெண்ட்ஸ் இணைந்து எச்.ஐ.வி.பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டும் விதமாக நவராத்திரி மேளா நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கில் நடைபெற்றது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் ஒருங்கிணைத்த,இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,ஆண்கள் ,பெண்கள். மற்றும் குழந்தைகளுக்கான விற்பனை கண்காட்சி நடைபெற்றது.

சுமார் நாற்பது அரங்குகள் கொண்ட இந்த விற்பனை கண்காட்சியில் பெண்களுக்கான ஆடை,அணிகலன்கள்,மேக்கப் சாதனங்கள்,அழகு சாதனம் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள்,குழந்தைகளுக்கான பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதிலிருந்து பெறப்படும் நிதியை எச்.ஐ.வி.பாதித்த குழந்தைகளின் சிகிச்சை மற்றும் உதவிக்காக பநன்படுத்த போவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் பயன்படுத்திய ஆடைகள்,பொம்மைகள் போன்றவற்றையும் வழங்க உள்ளதாகவும்,தொடர்ந்து ஒரு நாள் நடைபெறும் நவராத்திரி மேளாவில் தாண்டியா கர்பா போன்ற நடனங்களும் இடம் பெற உள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சி துவக்க விழாவில், ஜி.சி.டைல்ஸ்,,அக்ருதி கிளப்,டெல்ஸி,வில்வா,ஆக்ஸி நைன், பேஸ் ஈவெண்ட் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த வினல் படேல்,ஆஷா ராவ்,யஷா,பல்லவி கோடேச்சா,பராக்,ஹர்சில் ஷா,ஏ.பி.சி.டி.பவுண்டேஷன் கிரிஷ் அஷ்ராணி,சுஜல்,கரண்,அ்னன்யா,ராகவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments