அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு மனித நேயத்தை வலியுறுத்தி மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது!!
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம், ஆகியோர் சார்பாக மனித நேயத்தை வலியுறுத்தி மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனித நேயத்தை வலியுறுத்தும் அண்ணல் காந்தியின் 155 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் ஆகியோர் இணைந்து மத நல்லிணக்க கருத்தரங்கம் கோவை சாய்பாபாகாலனி பகுதியி்ல் உள்ள ஜே.கே. ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்ற இதில்,நிர்வாகிகள் எம் எம் ராமசாமி சுப்பிரமணியன் பஷீர், திலீப் குமார், காந்தி சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இஸ்கப் மாவட்ட செயலாளர் ராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், ஆறுமுகம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பேபி சுதா ரவி சரவணகுமார் மல்லிகா புருஷோத்தமன் சாந்தி பிரவீன் ராஜ் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்,மகாத்மா காந்தியின் முகமூடி அணிந்து கொண்ட பலர் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையுரையாற்றினார்.அப்போது பேசிய அவர், மத நல்லிணக்க பிரச்னைகளுக்கு தீர்வு காணவும்,மனித நேயத்திற்கும் காந்திய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுவதாக கூறினார்.
இஸ்கப் மாநில செயலாளர் கோட்டியப்பன், திருக்குறள் அன்வர் பாஷா முனைவர் அபுதாகிர் கோட்டை செல்லப்பா பாலசுப்பிரமணியன் சீனிவாசன் பூபேஷ் சஞ்சய் காந்தி பொன்ராஜு,அயூப் ரியாஸ், முகமது இஸ்மாயில் அசேன் தங்கவேல் கண்ணன் மெட்டல் சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments