எட்டயபுரத்தில் தேவரின் ஜெயந்தி விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.!!!!

 

-MMH

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது பிறந்த நாள் மற்றும் 61வது குரு பூஜையை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில்  எட்டயபுரம் நகர அதிமுக  அவை தலைவர் செ. கணபதி, பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, சின்னத்துரை , கருப்பசாமி , ஒன்றிய  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயகுமார்,  ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் சாந்தி. வார்டு பிரதிநிதி வேலுச்சாமி. ஐஸ் முனியசாமி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், 


-முனியசாமி.

Comments