பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி சிவசாமி அவர்களுக்கு விருது!!
தமிழ் ஊடகம் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான உள்ளாட்சி முரசு விருது வழங்கும் விழா கோவை கோ இந்தியா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறந்த உள்ளாட்சி பிரதிநிதியாக பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி சிவசாமி அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து விருது பெற்ற நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் திருமதி .சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்களிடம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றார்.உடன் கோவை தெற்கு மாவட்டம். பொள்ளாச்சி நகர கழக திமுக செயலாளர் திரு. இரா.நவநீதகிருஷ்ணன் உடன் இருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments