விளாத்திகுளத்தில் நடைபெற்ற எஸ்.பி-யின் "புதிய பாதை" வழிகாட்டு நிகழ்ச்சி!!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை அழைத்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைந்த குழுவின் "புதிய பாதை" என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின் படி, இந்த "புதிய பாதை" வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை சார்பாக விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து "புதிய பாதை" என்ற நிகழ்ச்சியானது விளாத்திகுளம் பகுதியில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த நபர்களை அழைத்து திருந்தி வாழ புதிய பாதை என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, மனநல ஆலோசகர் ஞானபிரகாசம், வழக்கறிஞர்கள் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.
Comments