புதிய பாசன கால்வாய் அமைத்துத் தருமாறு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அவர்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை.!!!

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியதாக பாசன கால்வாய் அமைத்து தர நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒட்டப்பிடாரம்  சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.

நேற்றைய  தினம் நடந்த  சட்டப்பேரவையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  எம் சி.சண்முகையா அவர்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேய்குளம் , குலையன்கரிசல் குளம் மற்றும் கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.  கடந்த இரண்டு ஆண்டு  மழை பற்றாக்குறை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாலும் விவசாய பணிகள் பாதிப்பு அடைவதாலும் தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் இருந்து புதிய பாசன கால்வாய் அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றி தரப்படும் என சட்டமன்றத்தில் பதிலளித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments