தீபாவளி பட்டாசால் தீ விபத்து ஏற்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்!!கோவையில் தொடர் ஆய்வு நடத்தி விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்!!!
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நிரந்தர பட்டாசு கடைகள் அனைத்திலும் வருவாய், போலீஸ், தீயணைப்பு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராமல் நடைபெறும் தீ விபத்துகளை இதனால் தடுக்கலாம். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், காந்திபுரம் நுாறடி சாலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட பட்டாசு அனைத்தும், நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முற்றிலும் கருகி நாசமானது. பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே போல் தாமஸ் வீதியிலுள்ள ஒரு குடோன், தடாகம் சாலையில் ஐ.ஏ. எஸ்.,பயிற்சி மையத்தில், மில் தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும், கொடுக்க வைக்கப்பட்டிருந்த பட்டாசு ரகங்கள் வெடித்து தீ விபத்தும், சிலருக்கு காயமும் ஏற்பட்டது.
இது போன்ற சம்பவங்கள், தற்போதைய பண்டிகை காலத்தில் நடப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நிரந்தர பட்டாசு லைசென்ஸ்தாரர்களை அழைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது குறித்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில், ஹிந்து அமைப்புகள் கலெக்டர் கிராந்திகுமாரிடம் கோரிக்கை வைத்தன. அவர், மாவட்ட வருவாய் அலுவலரை( டி.ஆர்.ஓ.,) பார்க்க அறிவுறுத்தினார்.
டி.ஆர்.ஓ.,வும் விசாரித்து, ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு மாதத்திற்கு முன்பும், ஓசூர் அத்திப்பள்ளியில் நேற்று முன் தினமும் நடந்த பட்டாசு விபத்துகளில், பத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நேற்று முன் தினம் கூட, புதுக்கோட்டையில் பட்டாசு விபத்து நிகழ்ந்துள்ளது.
கோவையில் இது போன்ற விபத்துக்களை தடுக்க, நிரந்தர லைசென்ஸ் வைத்திருக்கும் பட்டாசு விற்பனையாளர்களின் கடைகளிலும், அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''அதிகாரிகளை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறேன். வருவாய், தீயணைப்பு, காவல்துறை இணைந்து ஆய்வு மேற்கொள்வர்,'' என்றார். இப்போது மட்டுமல்ல, தீபாவளி முடியும் வரை தொடர் ஆய்வு நடத்தினால் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments