விளாத்திகுளத்தில் பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பாதயாத்திரையில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கை நிறைவேற்றம்!!

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி விளாத்திகுளத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது, மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேசன் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர்  பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் தனக்கு எலக்ட்ரிக் தானியங்கி வாகனம் ஏற்பாடு செய்த தருமாறு கோரிக்கை மனு கொடுத்திருந்தார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், மாற்றுத் திறனாளி முருகேசனின் கோரிக்கையை ஏற்று ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்  தானியங்கி  வாகனத்தை மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவனுக்கு அனுப்பி வைத்து மாற்றுத்திறனாளி முருகேசனிடம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில், நேற்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு பா.ஜ.,மாவட்ட தலைவர் வெங்கடேசன்  சென்னகேசவன் மாற்றுத்திறனாளி முருகேசனிடம் எலக்ட்ரிக் தானியங்கி வாகனத்தை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments