வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் பாராட்டு!!
உலக அளவில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி வெள்ளி பதக்கம் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரரை சட்டமன்ற உறுப்பினர் நேரில் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை அருகே உள்ள மீனாட்சிபுரம் ஊராட்சி, K.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மகாராஜா என்ற விளையாட்டு வீரர் கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலக அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ள மகாராஜா அவர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் அழைத்து பாராட்டி ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் சார்பில் விரைவில் ஊக்கத்தொகை பெற்று தரவும் ஆங்கிலம் இளங்கலை முடித்துள்ள கொரோனா காலகட்டத்தில் தகப்பனாரை இழந்த மகாராஜா அவர்களுக்கு அரசு பணி விரைவில் கிடைத்திடவும் நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதி அளித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments