பொங்கல் பண்டிகை! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு!!
தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (புதன்கிழமை) முதல் விரைவு ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செப்டம்பர் 13-ம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 14-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் .
மேலும் ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இதனை பொங்கல் பண்டிகைக்கு பயணிப்போர் திட்டமிட்டுக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments