ஆசிய கோப்பை கிரிக்கெட்!! இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது ஆட்டமாகும்.
இந்த போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-அருண்குமார், கிணத்துக்கிடவு.
Comments