சி.எஸ்.ஐ.கீழ் இயங்கும் கல்லூரிகள் தென்கொரியாவில் உள்ள ஹண்டோங் குளோபல் பல்கலைகழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
கல்லூரியில் பயிலும் போது மாணவ,மாணவிகளின் திறன்களை வளர்க்கும் விதமாக சர்வதேச அளவிலான பல்கலைகழகங்களுடன் கல்லூரிகள் ஒப்பந்தங்கள் செய்து வருகின்றன.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி உட்பட சி.எஸ்.ஐ.கீழ் இயங்கி வரும் நான்கு கல்லூரிகள் மற்றும் தென் கொரியாவின் ஹண்டோங் குளோபல் பல்கலைகழகத்துடன் இணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையழுத்தானது.இதற்கான விழா பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.தெ
ன்னிந்திய திருச்சபைகளின் கோவை மண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,செயலாளர் பிரின்ஸ் கால்வின், உதவி தலைவர் டேவிட் பர்ணபாஸ் ,பொருளாளர் அமிர்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக ஹண்டோங் குளோபல் பல்கலைகழகத்தின் சர்வதேச தூதர் சுங்மின் கிம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதில், கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி,கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி,கோவை பி.எட்.கல்லூரி ,கரூர் பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகள் மற்றும் தென்கொரியா ஹண்டோங் குளோபல் பல்கலைகழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் மூலம் இந்த நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது திறன்களை சர்வதேச அளவில் மேம்படுத்தி கொள்ள முடியும் என பிஷப் திமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பேராயரம்மா ஆனி ரஙீந்தர் ,பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் ,கல்லூரியின் முதல்வர்,ஜெமிமா வின்ஸ்டன் ,கேத்தி சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி முதல்வர் அருமைராஜ்,பி.எட்.கல்லூரி தாளாளார் டாக்டர் ராஜன்,மற்றும் முதல்வர் கெட்ஸி,கரூர் பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments