வேப்பலோடை ஆதிபராசக்தி மன்றம் சார்பில் உப்பு வளம் செழிக்க கலச விளக்குவேள்வி பூஜை!!

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா, ஆடிப்பூர விழா, மன்ற ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. 

உப்பு வளம் சிறக்கவும், தொழில்வளம் சிறக்கவும்,  மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி மாபெரும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.  இதனையடுத்து கஞ்சி கலய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ஆதிபராசக்தி மன்றத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிரச்சாரக் குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை குளத்துார் பஞ். துணைத் தலைவர் மாரிசெல்வி வழங்கினார்.  அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் கிருஷ்ண நீலா, செல்லத்துரை, வட்டத் தலைவர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments