கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி உயர்தர சிறப்பு கண் மருத்துவமனையை நடிகை ராதிகா சரத்குமார் நாளை துவக்கி வைக்கிறார்!!

இது குறித்து டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், செய்தியாளர்களை சந்தித்தனர் கூறுகையில்: 

டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில் கண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும், கண்களைச் சுற்றிலும் உள்ள சவால்களுக்கும்  உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த உயர்தர சிறப்பு தீர்வுகளை தரும் மருத்துவனை இது. 

முன்னேறி வரும் நாகரீக உலகில் புதிய பரவசமிக்க கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் கண்நோய் தீர்வுகளுக்கு பின்புலமாக விளங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால், கண்நோய்க்கான நிவாரணங்களையும், தீர்வுகளையும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்தது. தற்போது இயந்திரங்களும், லேசர்களும் தீர்வுகளுக்கான கருவிகளாக மனிதனின் கையில் உள்ளன. இதே தொழில்நுட்பங்கள், மனிதனின் கண்களை நேரடியாக பாதிக்கின்றன. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து  வெளிச்சமான விளக்கு ஒளி, தொடர்ந்து திரைகளை பார்த்தல், சுற்றுச் சூழல் போன்றவைகளும் ஏற்படுகின்றன. டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில், எப்போதும் மாறாத இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் திறம்பட செயல்படும் சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். 

எனவே, சிறப்பான பரிசோதனை, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை  கருவிகள், சிறப்பான ஆலோசனைகளுடன் கண்களை பாதிக்கும் சவால்களுக்கு சரியான தீர்வுகளை அளிக்கிறோம். டிரினிட்டி பல்வேறு தேசிய நிறுவனங்களுடனும், முன்னணி மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நகரில் முதியோருக்கான சேவையையும் மேற்கொண்டு வருகிறோம். இதன் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனையை திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் நாளை துவக்கி வைக்கிறார். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கோவையில் இயங்கும் மருத்துவமனையில், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ் தலைமையில் இயங்கும் என்றார்.

-சீனி, போத்தனூர்.

Comments