கொல்லங்கிணறு சத்துணவு மையத்தில் ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் அதிரடி ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கொல்லங்கிணறு கிராமத்தில் சத்துணவு மையத்தில் மதிய உணவு திட்டத்தில் புழுக்கள் இருப்பதாக தகவல் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொல்லங்கிணறு கிராமத்திற்கு சென்று அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு மையங்கள் ஆய்வு செய்யப்பட்டது மற்றும் அரிசியின் தரம் ஆய்வு செய்யப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அங்கு சமைக்கப்பட்ட உணவை பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்களும் அந்த உணவை சாப்பிட்டார். மேலும் சாப்பாட்டில் புழு எதுவும் இல்லை சாப்பாடு நல்லமுறையில் இருக்கிறது என ஆய்வில் தெரியவந்தது. இதேபோல் தொடர்ந்து தினந்தோறும் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான உணவுகள் வழங்க வேண்டும் என அறிவுரைகளை வட்டார வளர்ச்சி அனைவரும் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments