அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக வீரன் சுந்தரலிங்கத்தின் 224ஆவதுநினைவு தினம் அனுசரிப்பு!!

சுதந்திரப் போராட்ட வீரா் வீரன் சுந்தரலிங்கத்தின் 223ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் அருகே கவுனகிரியில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக. நிறுவனத்தலைவர் எல்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலகின் முதல் தற்கொலை படை தலைவர் மாமன்னர் சுந்தரலிங்கனார் 224வது வீரவணக்க நாளை முன்னிட்டு அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக. அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்கனார் பேரவை சார்பாக. எல்.கே.முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் தேவேந்திரன் இளைஞரணி தலைவர் ஏ.கே.எஸ்.கண்ணன் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்த் மற்றும் அமைப்பாளர்கள் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தார். அந்தச் சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது தனது வாளால் பல வெள்ளைச் சிப்பாய்களை வீழ்த்தினார். இதையடுத்து கட்டபொம்மனை அழிக்க வெள்ளையர்கள் 1799ல் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார்கள். ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது. பீரங்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் வெள்ளையர்களின் படை குவிந்திருந்தது.

1799 செப்டம்பர் 8ஆம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண்ணை வடிவுடன் ஆடுமெய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

நினைவுச் சின்னம்:

தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments