"22 வயதிலேயே கலைஞர் என்னை அரசியலுக்கு அழைத்தார்!!" - மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும் உலக நாயகனுமான பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன்

22 வயதிலேயே கலைஞர் என்னை அரசியலுக்கு அழைத்தார். அப்போது செல்லவில்லை தயக்கம் காட்டினேன் 60 வயதில் தான் தெரிந்தது அரசியல் புரிந்தது. 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கு காத்திருப்பது என்பது வேண்டாத ஒன்று, வருகின்ற தேர்தலில் இளைஞர்கள் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் ஒத்தையா ரெட்டையா இல்லாமல் ஒழுங்கானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில் அமைந்துள்ளது பார்க் கல்வி குழுமங்கள். இதன் பொன்விழா மற்றும் சிறந்த ஆசிரியர் விருது மற்றும் துரோணா விருது விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும் உலக நாயகனுமான பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மறைந்த பார் கல்வி குழுமங்களின் நிறுவனர் திருமதி பிரேமா ரவி அவர்களின் அருளாசியுடன் நடைபெற்ற இந்த விழாவில் பார்க் கல்வி குழுமங்களில் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பி.வி ரவி, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி மற்றும் செயலாளர் டி ஆர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் பார்க் பொன்விழா ஆண்டு 2023 துரோணா  அவார்டு முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் “தி மூன் மேன் ஆஃப் இந்தியா” என்று அழைக்கப்படும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் "கையொப்பம்"  நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்ற  கவிஞர்/எழுத்தாளர் புவியரசு ஆகியோருக்கு துரோணா  விருது வழங்கப்பட்டது. மேலும் பார்க் கல்வி குழுமங்களின் முன்னாள் மாணவர்களான சந்திராயன் மூன்று திட்ட அலுவலர்களான ரமேஷ் சுப்பிரமணியன் மற்றும் ஹரிஹரன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் முன்னாள் மாணவர்கள் பிக் பாஸ் சீசன் 6 புகழ் நடிகை ஷிவின் கணேசன், திரைப்பட தயாரிப்பாளர் கே விஜய் பாண்டி, ஆப்ஷன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான திரு சுஜித், யோகா போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற யோகா டிரெயினர் வைஷ்ணவி உட்பட்டவர்களுக்கு சிறப்பு முன்னாள் மாணவர்களுக்கான விருது வழங்கி கெரவிக்கப்பட்டது. 

-சீனி, போத்தனூர்.

Comments