குறுக்குச்சாலை அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை ஒன்றிய துணை பெருந்தலைவர் காச விஸ்வநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கி இணங்க  அரசின் தொலைநோக்கு திட்டம் தாய்மார்களின் அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் குறுக்குச்சாலை ஊராட்சி கே.வேலாயுதபுரம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயல் வரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் வே.காசி விஸ்வநாதன் அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காலை உணவுப் திட்டம்:  

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்  மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது . ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப்படும்.

இந்த நிகழ்வின  போது கே.வேலாயுதபுரம் கிளைக் கழகச் செயலாளர் M.நேசப்பன் அவர்கள் பிரதிநிதி M. பாண்டி அவர்கள் கிராம நிர்வாகிகள் S.ராஜா A.லிங்க பெருமாள் முனியசாமி பால்குமார் காவல்துறை செல்வம் ஆசிரியர்கள் காலை சிற்றுண்டி உணவு பணியாளர் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments