ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மீன் பாசி ஏலம் நடைபெற்றது...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுவந்தனை ஊராட்சி பசுவந்தனை கோவில் குளத்தில் 2023-24 ஆம் ஆண்டு மீன் பாசி குத்தகை செய்து கொள்ள இன்று காலை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஏலம் கேட்க விரும்புவர்கள் டோக்கன் தொகை ரூபாய் 1000 செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆரம்ப விலை 3500 இல் இருந்து ஏலம் கேட்கப்பட்டது பல்வேறு போட்டிகளில் கடைசியாக 93 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் முடிக்கப்பட்டது.
பல்வேறு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது குளம் அல்லது கண்மாயை தவிர வேற ஊரணி குளங்களில் மீன் ஏலம் செய்துள்ளவர் அனுமதிக்கப்பட மாட்டாது, ஏலம் கிடைக்காதா நபர்களுக்கு ஏலம் முடிந்தவுடன் டோக்கன் தொகை திருப்பி வழங்கப்பட்டது, ஐந்தாண்டு காலம் மட்டுமே இந்த உரிமை செல்லுபடியாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.
Comments