வால்பாறை முடீஸ் பகுதியில் ரேஷன் கடையில் புகுந்து பொருட்களை சூறையாடிய காட்டு யானைகள்!!!


கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளில் தினமும் ஏதாவது ஒரு பகுதியில் வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும் அவர்களின் உடைமைகளை நாசம் செய்வதும் தொடர்கதை ஆகி வருகிறது.


இதுபோல் வால்பாறை முடீஸ் பகுதியில் ரெட் ரோஸ் நியாயவிலை கடையை உடைத்து உள்ளே புகுந்த மூன்று யானைகள் கடையின் உள்ளே இருந்த அரிசி பருப்பு மற்றும் பொருட்களை எடுத்து தின்றும் சிதறடித்தும் சூறையாடி உள்ளன.


மேலும் கடையில் பொருட்களை அளந்து போட உதவும் தராசுகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments