விளாத்திகுளத்தில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், N.Kபெருமாள் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகரச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் சேர்மன் வரதராஜ பெருமாள், வார்டு கவுன்சிலர்கள் அழகுபால்ஆசாரி, பிரியா, முன்னாள் கவுன்சிலர் சங்கர், மகளிர் அணி சாந்தி மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ் உட்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments