நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மாக்கினாம்பட்டி அரசு பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது!!
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொள்ளாச்சி அருகாமையில் உள்ள மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் இந்திய தேசிய 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் இரண்டு பீரோக்கள் மற்றும் நான்கு மின்விசிறிகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். கவிஞர் முருகானந்தம் நகர மன்ற உறுப்பினர் எம்.கே, சாந்தலிங்கம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் இரண்டு பீரோக்கள் 4 மின்விசிறிகள் மற்றும்.பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட் புத்தகங்கள் ஆகியவைகளை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் அவர்கள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வழங்கி மாணவ மாணவிகளிடையே சுதந்திர தின உரையாற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முன்னதாக மாணவ மாணவிகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பரதம் குச்சிப்புடி .யோகா உள்ளிட்ட பல்வேறு நடன கலைநிகழ்ச்சிகள் வெகு அழகாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள்.பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments