கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் தொடங்கப்பட்டுள்ளது!!

கோவை ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவனையில், அதிநவீன பிரசவ மையம் தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தனர்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அலுவலர் சுவாதி ரோஹித் வழிகாட்டுதலின் படி தொடங்கப்பட்டுள்ளது.பிரசவங்கள் இதற்கு முன் மருத்துவ உதவியின்றி செய்யப்பட்டன. இம்மையத்தில் கடந்த சில தலைமுறைகளாக காணப்படும் பிரசவச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட உள்ளது. பொதுவாக 85 முதல் 90 சதவீத பிரசவங்கள், சுகப் பிரசவங்களாக உள்ளன. மீதமுள்ள 10 முதல் 15 சதவீத பிரசவங்களுக்கே மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன.ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மிகுந்த பாதுகாப்புடன் பிரசவம் பார்ப்பதற்கு சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 40 ஆண்டுகளாக கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு இம்மருத்துவமனை உறுதுணையாக உள்ளது.தற்போது தொடங்கப்பட்டுள்ள அதிநவீன பிரவச மையத்திற்கு ஒரு தளம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. தாய்மார்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை இம்மருத்துவமனை ஏற்படுத்தி தந்துள்ளது. 

இச்சேவையில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் செவிலியர்கள், பிஸியோதெரபிஸ்டுகள். மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

-சீனி, போத்தனூர்.

Comments