ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய் உள்ள மது பாட்டில்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் பெரிய குளம் கண்மாய் உள்ளது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குளத்தின் மூலம் பெறப்படும் நீர்ப்பாசனம் விவசாயத்திற்கு மற்றும் கால்நடைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பெரியகுளத்தில் டன் கணக்கில் மதுபாட்டில்களும் இறைச்சி கழிவுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் குப்பைகளை கொட்டி வருவதால் நீர் மாசுபடுவது மட்டுமின்றி கால்நடைகளும் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இங்கே குப்பை கொட்டாதீர் மற்றும் இங்கே மது அருந்தாதீர்கள் மீறினால் காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர் அவர்களிடம் கடந்த 4ம் தேதி மனு கொடுக்கப்பட்டது, இதுவரை ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது P.கரன்சிங் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் , V.கமலக்கண்ணன் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு மாவட்ட செயலாளர் , S.சுப்பையா அம்மா பேரவை செயலாளர் S.மலக்கனி வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் , R.கனகராஜ் ஓட்டப்பிடா ஊராட்சி கழக செயலாளர், S.சிவஞானம் ஓட்டப்பிடாரம் கிளைக் கழக செயலாளர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments