நாங்குநேரி பள்ளி மாணவர் சினத்துரை அவரது தங்கை சந்திரா உடன் தமிழர் விடியல் கட்சி சந்திப்பு!!
நாங்குநேரி சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா அவர்களை இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்று தமிழர் விடியல் கட்சியின் சார்பில் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறப்பட்டது.
தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் அவர்கள் நிதி உதவியை வழங்கினார்கள்.இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சேமா. சந்தன ராஜ், நெல்லை மாவட்ட பொறுப்பாளர் நெல்லை மணிகண்டன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் தமிழன் டேவிட், மாநகர பொறுப்பாளர் ஆட்டோ ராஜபாண்டி, நெல்லை மாவட்ட தமிழர் விடியல் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாதிக்கப்பட்ட சின்னத்துரை என்ற மாணவனுக்கும் சந்திரா மாணவிக்கும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இளமாறன் அவர்கள் ஆறுதல் கூறினார்கள். உடல்நிலை சரியானதும் கண்டிப்பாக தொலைபேசி மூலமாக எனக்கு நீங்கள் அழைப்பு விடுக்க வேண்டும் நான் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வந்து உங்களை பார்ப்போம்.
உங்களுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவாக இருப்போம். என்னையும் எங்களையும் உங்கள் சொந்தக்காரர்களாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். என்னை உங்கள் அண்ணனாக நினைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எதற்கும் கவலைப்பட கூடாது உங்களுக்காக நாங்கள் அனைவரும் இருக்கிறோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த உலகத்தில் நன்மை செய்யக்கூடியவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் அனைவரும் உங்கள் பக்கம் கண்டிப்பாக நிற்போம். நீங்கள் எதற்கும் பயப்படக்கூடாது அஞ்ச கூடாது. தொடர்ந்து உடல்நலம் தேறியுடன் உங்கள் படிப்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று இளமாறன் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
தங்கை சந்திரா அவர்களிடம் நிதி உதவி கொடுத்து எதற்கும் கவலைப்பட கூடாது உனது படிப்பு செலவுக்கு என்ன வேண்டுமோ அதை நீ என்னிடம் தாராளமாக கேட்கலாம் குணமாகி வீட்டுக்கு வந்தவுடன் எனது அலைபேசிக்கு நீ கண்டிப்பாக அழைப்பு கொடுக்க வேண்டும் நான் உனது வீட்டிற்கு வருவேன் தங்கச்சி என்று, மிகவும் பாசமாக எடுத்துக் கூறினார்கள். தொடர்ந்து தமிழர் விடியல் கட்சி தம்பி சின்னத்திரையோடும் அவருடைய குடும்பத்தோடும் என்றும் துணை நிற்போம் என்று நாங்கள் கூறி வந்தோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments