இரவு நேரத்தில் வாழைத்தோட்டத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை!! போராடி வனதிற்குள் அனுப்பிய வனத்துறையினர்!!!

 

-MMH

கோவை தடாகம் அதன், சுற்று வட்டார பகுதிகளில்  குடியிருப்பு பகுதிகள் உள்ளது, இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது இந்த நிலையில் விலை நிலங்களில் உள்ள, வாழை, தென்னை, போன்றவற்றை உண்ண யானைகள் அவ்வபொழுது இங்கு வருவதுண்டு, இரவு நேரங்களில் யானைகள் உலா வருவது தற்போது மீண்டும், அதிகரித்துள்ளது, இதன் ஒரு பகுதியாக  தடாகம், அடுத்த காளையனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்க்குள் உலா வந்த யானை, அங்கிருந்த வாழை மரங்களை சாப்பிட்டது, இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், வாழை தோட்டத்திற்க்குள் நின்று கொண்டிருந்த யானையை காட்டுக்குள் அனுப்பும் பணியை மேற்கொண்டனர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி யானையை வனப்பகுதியில் அனுப்பினர்,  இதனால் இந்த பகுதியில் பெரும் அச்சம் நிலவியது, மேலும் இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கேட்டு கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments