வனப்பகுதிக்குள் சவாரி சென்று வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவர் கைது மற்றும் அபதாரம் !!!
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் யானை, சிறுத்தை, கரடி,மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட பலவகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேர ட்ரக்கிங் என்ற பெயரில் சிலர் வன விலங்குகளை தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது காஞ்ச மழை பகுதியில் இரவு நேரத்தில் சவாரிக்காக சென்ற நியாஸ் (வயது 26) வால்பாறை கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நள்ளிரவு 11 45 மணியளவில் தனியார் வனப்பகுதிக்குள் நுழைந்து பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக வனத்துறை நியாஸ் என்பவரை கைது செய்து ரூ 25000 அபராதம் விதித்துள்ளனர்.
வால்பாறை பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் ட்ரக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் உத்தரவை மீரும் நபர்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments