காவல் நிலைய பதிவேடுகள் பராமரிப்பில் நூறு சதவீத வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்!! - வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி அறிவுரை!!

காவல் நிலையங்களில் பதிவேடு பராமரிப்பில் 100% வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று வேலூா் சரக காவல் துணைத் தலைவா் (டிஐஜி) எம்.எஸ்.முத்துசாமி தெரிவித்தாா். வேலூா் சரக காவல் நிலையங்களில் பதிவேடு பராமரிப்பு குறித்து காவல் நிலைய அலுவலா், எழுத்தா்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் விஐடி பல்கலை. சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேலூா் சரக டிஐஜி தலைமை வகித்துப் பேசியது:

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவல் நிலையத்தில் பதிவாகும் ஒரு தகவல், வட்ட அளவிலான காவல் நிலையத்துக்குச் செல்லும். அங்கிருந்து துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாநில குற்ற ஆவண காப்பகம், தேசிய குற்ற ஆவண காப்பகம் வரை செல்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. தேசிய ஆவண காப்பக தரவுகள், இன்டா்போல் காவல் துறைக்கும் செல்கிறது. எனவே, உலகளவில் தகவல் அளிக்க வேண்டியுள்ளது

நீங்கள் பராமரிக்கும் பதிவேடுகளை வைத்துத்தான் நீதிமன்றங்களில் வழக்காட முடியும். எனவே, பதிவேடு பராமரிப்பில் 100% வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். ஒரு நபருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், ஏதாவது ஒரு ஆணையம் காவல் துறையை கேட்காமலே வந்து விசாரிக்கின்றனா். அந்த மாதிரி ஆணையம் முன்பு காவல் துறையின் ஆவணங்களை சமா்ப்பிக்க சரியான தகவலைக் கொடுக்க வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒருசில காவல் நிலையங்களில் ஆவணங்களை சரிவர பராமரிப்பதில்லை என்பது கவலையளிக்கிறது. காவல் நிலைய எழுத்தா்கள் மனுக்கள் மீது வெளியில் சென்று விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது. சிசிடிஎன்எஸ் வந்த பிறகு பலரும் எழுதுவதில்லை. இதனால், தண்டனை விகிதம் குறைவாக இருக்கிறது என்றாா்.

தொடா்ந்து, ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகானந்தம், காவல் நிலைய பதிவேடுகளை பராமரிப்பது குறித்து விளக்கினாா். பயிலரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மணிவண்ணன் (வேலூா்), காா்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பா்ட் ஜான் (திருப்பத்தூா்), கிரண் ஸ்ருதி (ராணிப்பட்டை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments