ஆகஸ்ட் 4 எலும்பு மூட்டு தினம்!! பொதுமக்களுக்கு எலும்பு அடர்த்தி தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை!!
கோவை எலும்பியல் சங்கம் வருகிற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மக்களிடம் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை எலும்பியல் சங்கம் வருகிற ஆகஸ்டு மாதம் 4ம் தேதி “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலை விபத்து நடந்த உடன் எவ்வாறு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வுகள் மற்றும் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துமனைகளில் எலும்புகளின் அடர்த்தியின் அளவை கண்டுபிடிக்கும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
ஓவ்வொரு வருடமும் எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மக்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை இந்தியா முழுவதும் எலும்பியல் சங்கம் நடத்தி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
“தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்” 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 4ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு 2012ம் ஆண்டில் தேசிய எலும்பியல் சங்கத்தின் அப்போதைய தலைவரான பேராசிரியர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் அதிக முயற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட “எலும்பு மற்றும் மூட்டு தினம் 2023” குறித்து தமிழ் நாடு எலும்பியல் சங்க நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தனசேகர் ராஜா, கோவை எலும்பியல் சங்க தலைவர் டாக்டர் மேஜர் கமலநாதன், செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், சங்க பொருளாளர் டாக்டர் மகேஷ்வரன் ஆகியோர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
-சீனி, போத்தனூர்.
Comments