கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் சந்திராயன் 3 வெற்றி கொண்டாட்டம்!!
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்ட நிகழ்வை கொண்டாடும் விதமாக,கோவை மணியகராம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவ, மாணவிகள் விக்ரம் லேண்டரை தத்ரூபமாக வடிவமைத்து தங்களது முகத்தில் தேசிய கொடி வரைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிக்கரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் மகிழ்ச்சியை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் ஒரு பகுதியாக, கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி மாணவ, மாணவிகள் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக கையாண்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திராயனின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர். இதில் விக்ரம் லேண்டரிலிருந்து பிராக்யான் ரோவர் இறங்குவது போல் மாணவர்கள் தயாரித்ததோடு, தங்களது முகத்தில் சந்திரயான் 3 விண்கலம் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தினர்.இது குறித்து பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளார் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் கூறுகையில், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தை மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குனர் வீரமுத்துவேல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதை பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டாடி வருவதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பணம் செயல் உட்பட ஆசிரிய, ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments