ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் பள்ளியில் மரத்தான் போட்டிகள் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப்பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டியான நடத்தப்பட்டது. போட்டியினை பள்ளி தாளாளர் வின்சென்ட் மற்றும் தலைமை ஆசிரியர் அன்புநாதன் அவர்கள் துவங்கி வைத்தனர். 

இந்த மாரத்தான் பந்தயத்தில்142 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு 14 கிலோ மீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டது  பள்ளியில் இருந்து புறப்பட்டுச் அன்னை சிக்கன் வரை சென்று மீண்டும்  பள்ளிக்கு வர வேண்டும். மாணவிகளுக்கு பத்து கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது பள்ளியில் இருந்து புறப்பட்டு சுந்தரலிங்கம் தோரணவாயில் வரை சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Watch video here...

இந்த பரிசு தொகையானது முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டது, முதல் பரிசு ரூபாய் 3001 இரண்டாம் பரிசு 2001 மூன்றாம் பரிசு 1001 அனைத்து பரிசுகளையும் நடராஜன் மேல்நிலைப்பள்ளி காட்டுநாயக்கன்பட்டி தட்டிச் சென்றது. தொடர்ந்து 20 வெற்றியாளர்களுக்கு மெடல் வழங்கப்பட்டது. 

போட்டியினை ஆசிரியர் ஹெலன் மேரி, வெள்ளி விழா குழு தலைவர் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.  பல்வேறு பள்ளியில் இருந்து மாணவர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments

JEGATHESH said…
Super. ...💐💐💐💐💐
JEGATHESH said…
💐💐💐💐💐💐💐💐