அடுக்குமாடி குடியிருப்பில் நகை மாயம்!! வீட்டை சுத்தம் செய்வதாக கூறிவந்த பெண்களா? காவல்துறை விசாரணை!!!
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி 47 வயதான குரு ஞானாம்பிகை, இவர் அவினாசிலிங்கம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வயது முதிர்ந்த தாயாருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் குரு ஞானாம்பிகை சொந்த விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். அந்த சமயத்தில் அவரது வயது முதிர்ந்த தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இரண்டு பெண்கள் ஒரு குழந்தையுடன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர்கள் வீட்டை சுத்தம் செய்து தருவதாக கூறி வீட்டின் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்துள்ளனர், பின்னர் அவர்கள் சென்று விட்டனர், அதன் பிறகு சில நாட்கள் கழித்து ஊருக்கு வந்த குரு ஞானாம்பிகை பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த 29 பவுன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டை சுத்தம் செய்வதாக கூறிவிட்டு வந்த பெண்கள் நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments