ரத்தினம் கல்லூரியில் அனுகிரஹா வரவேற்பு நிகழ்ச்சி!!

  -MMH

ரத்தினம் கல்லூரியில் அனுகிரஹா வரவேற்பு நிகழ்ச்சி!!

  கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அனுகிரஹா எனும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார்.

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனுகிரஹா எனும் தலைப்பில் எம்.பி.ஏ.மற்றும் எம்.சி.ஏ.துறைகளின்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக,நடிகரும்,எழுத்தாளரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஈரோடு மகேஷ்  கலந்து கொண்டு பேசினார். 

மனிதனுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை மிக அவசியம். நம்பிக்கை கொண்ட மனிதனே வாழ்வில் அனைத்து தடைகளையும் கடந்து வெற்றி அடைகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் லட்சியம் வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி அவன் தினந்தோறும் பயணிக்க வேண்டும். அதில் அவன் வெற்றி அடைய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று பேசினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னதாக இரத்தினம் கல்வி குழுமங்களின்  தலைவர் முனைவர் மதன் செந்தில் பேசுகையில், மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதை வைத்து மக்களின் அன்றாட வாழ்வில் வரும் சிக்கல்களை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில்,இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் முனைவர்.நாகராஜ் துணை முதல்வர் முனைவர்.கீதா  தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர்.சிவசுப்ரமணியன் உட்பட மாணவ,மாணவிகள. பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments