வால்பாறையில் குழந்தைகளின் காப்பகத்திற்காக அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை!!
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் குழந்தைகள் காப்பகம் செயல் பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் காப்பகம் ஆற்றோர பகுதியில் அமைந்துள்ள ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த குழந்தைகள் காப்பகத்திற்கு வர சுமார் 100 முதல் 120 படிக்கட்டுகள் வரை இறங்கி வரவேண்டி உள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் பழைய அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் காப்பகத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments