பொதுக்கழிவறை கழிவுகள் ஆற்றில் கலக்கும் அவலம்??

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் மூணார் டவுனில் சுமார் 3 பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பொதுக் கழிவறைகள் நவீனமயமாக்கப்பட்டு ஒரு கழிவறை  மட்டும்தற்போது வரை மேம்படுத்தப்படாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அது மட்டுமல்ல இந்த மூன்று கழிப்பறைகளில் இருந்தும் கழிவுகள் முற்றலுமாக முதிரப்புழா ஆற்றில் கலப்பதால் ஆற்றின் நீர்நிலை தன்மை மாறுகிறது. மற்றும் இவ்வாற்றின் மூலமாக பள்ளிவாசல், ஆணைசால் மற்றும் அடிமாலி வரையிலும் குடிநீராக உபயோகப்படுத்தப்படுகிறது.

Uploading: 105936 of 105936 bytes uploaded.

எனவே அரசு உடனடியாக பொதுக் கழிப்பறையிலிருந்து கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவது தடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மற்றும் சுற்றுலா தளமான மூணார் பகுதியில் சுத்தத்தை அதிகமாக மேம்படுத்தும் வகையில் மூணார் பஞ்சாயத்து செயல்பட்டு வருகின்றது. இதையும் கவனத்தில்  கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments