மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்காத தமிழக அரசின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று மாலை ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் வைத்து மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்காத தமிழக அரசின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் : மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மக்களுக்கு தெரிவிப்பதில்லை மத்திய அரசின் நிதி பங்கிட்டு பற்றியும் அறிவிப்பு பலகை வைப்பதில்லை, குறிப்பாக ஜல் ஜீவன் குடிநீர் திட்டம் மத்திய அரசு மிக முக்கிய திட்டம், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் மத்திய அரசால் வழங்கப்படும் திட்டமாகும், தெலுங்கானா அரசு முறையாக அறிவிப்பு பலகை வைக்கிறது மத்திய அரசின் நிதி பங்கீடு எவ்வளவு மாநில அரசு நிதி பங்கீடு எவ்வளவு என்று மக்களுக்கு தெரியப்படுத்துகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து செலவழிப்பது போல் விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். மரக்காணம் விஷ சாராய 24 பேர் இறப்பு பற்றி திமுகவும் கூட்டணி கட்சிகள் வாய் திறப்பதில்லை, சமூக நீதி பேசும் திராவிட வேங்கை வயல் கிராம பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு பற்றி பேச கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு பேச நேரமில்லை ஆனால் மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி பேசுகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோயில் பிள்ளை. அவர்கள் கல்வியாளர் பிரிவு, மாவட்டத் துணைத் தலைவர் தலைமையிலும் சுரேஷ் அவர்கள், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது , சிறப்பு அழைப்பாளர்கள் L. கிஷோர் குமார் அவர்கள் , மாவட்ட பொதுச் செயலாளர் மாவட்ட துணைத் தலைவர்கள் ஹேமமாலினி, முத்துமாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிழக்கு ஒன்றிய தலைவர் P.M.M. சரவணன் அவர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் சங்கர் அவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சேர்மராஜ் அவர்கள் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் அவர்கள் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாவட்டச் செயலாளர் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ராமர் அவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய துணைத் தலைவர்
கருப்பசாமி பாண்டியன் அவர்கள் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் புகழ் செல்வமணி அவர்கள் முத்தமிழ் செல்வன் அவர்கள் ஒன்றிய பொருளாளர் P. கதிர் அவர்கள், ஒன்றிய செயலாளர்கள் தேன்ராஜ் அவர்கள் முனிஸ் அவர்கள் ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பரத் அவர்கள் இளைஞர் அணி செயலாளர் மந்திர மூர்த்தி அவர்கள் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.
Comments