உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் இருந்து ஓஇ ஆலைகளுக்கு விலக்கு அளிக்க மாநில அரசுக்கு மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை !
இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவர் எம் .ஜெயபால் கூறுகையில், ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியேறும் கழிவுபஞ்சு முன்பு மெத்தை தலையணைகள் செய்ய பயன்படுத்தியும், விவசாய நிலத்தில் போட்டு எரித்து வந்தனர்.
அதே போல ஆயத்த ஆடை நிறுவனங்களில் வெளியேறும் பனியன் கழிவுகளும், பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பெட்பாட்டில்கள் உபயோகம் செய்த பின் நீர் நிலைகளிலும், நிலத்திலும் போட்டு சுற்றுபுற சூழலை மாசுபடுத்தி வந்ததை ஒப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மறுசுழற்சி செய்து மீண்டும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் வகையில் கைத்தறி விசைதறி, Home textiles, Technical Textile என சங்கிலி தொடரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கிரே மற்றும் ஒரு துளி நீரை கூட பயன்படுத்தாமல் 42 விதமான கலர் நூல்களை 2 முதல் 40 கவுண்ட் வரையிலான ஓ.இ நூல்களை கடந்த 40 ஆண்டு காலமாக உற்பத்தி செய்து,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாள் ஒன்றுக்கு தோராயமாக 25 லட்சம் கிலோவுக்கு மேல் கிரே மற்றும் கலர் நூல்களை தமிழகத்தில் உற்பத்தி செய்து நாடு முழுவதிலும் விற்பனை செய்து வருகின்றோம். கடந்த 2022 முதல் பருத்தி விலையை காரணம் கூறி தொடர்ந்து கழிவு பஞ்சின் விலைகளை உயர்த்தியதினால் முன்பு பருத்தி விலையில் 40-50 சதவீதம் அதிகபட்சம் கழிவு பஞ்சுகளின் விலைகள் இருந்தது. கடந்த பத்து மாதங்களாகவே 50-60-70 என 75% வரை விற்பனை செய்வதினால் எங்களது End product ஆன காடா மற்றும் Home textile பொருட்களை விலையை இதற்க்கு இணையாக உயர்த்த இயலாது.
பருத்தியை கொண்டு நூலை உற்பத்தி செய்யும் ஸ்பின்னிங் மில்களின் ஜவுளிகள் மீட்டர் 200 முதல் 4000 ரூபாய்க்கு மேல் தர அடிப்படையில் விற்பனை செய்ய இயலும். அதே சமயம் கழிவு பஞ்சு மூலம் உற்பத்தி ஆகும் ஓ.இ நூல்களை கொண்டு உற்பத்தி செய்யும் காடாவுக்கு மீட்டர் 28 முதல் அதிகபட்சம் 50 ரூபாய்க்கு மேல் விற்க இயலாத போது பருத்தி விலையில் 75 சதவீதம் என்பது சாத்தியமே இல்லை.
இந்நிலையில் தமிழக மின்வாரியம் LTCT மின்சாரத்துக்கு பீக்ஹவர்ஸ் புதிதாக புகுத்தியதும் மற்றும் டிமாண்ட் சார்ஜ் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியது. மில்லை இயக்கினாலும் இயக்காவிட்டாலும் 112 கிலோ வாட்டுக்கு 17200 மாதமாதம் செலுத்த உத்தரவு போட்டதினால் மேலும் நலிவடைய செய்து கையில் இருப்பதையும், புதிய கடன் பெற்று வங்கியில் வாங்கிய கடனையும், அன்றாட செலவுகளையும் எதிர் கொண்டு வருவதினால் கடைசி வாய்ப்பாக நிலைமை சரியாகும் வரை முழு உற்பத்தி நிறுத்தம் செய்ய கனத்த இதயத்துடன் கடந்த 5 ம் தேதி முதல் மேற்கொண்டு வருகின்றோம்.
-சீனி, போத்தனூர்.
Comments