மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஏழை எளியவர்கள் நிறைந்த பகுதி பட்டா வழங்க உதவிட வேண்டும்!! ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை!!
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன் பேசுகையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மிகப்பெரிய 60க்கும் மேற்பட்ட ஊர்களை உள்ளடக்கிய பகுதியாகும் கடந்த ஒருவருடமாக ஏழை எளியவர்கள் ஒரு சென்ட் முதல் 3 சென்ட் வரை இடம் வாங்கி குடியிருப்பவர்களுக்கு ஊராட்சியில் முன்னுரிமை கொடுக்கப்படும் பின்னர் தொடர்ந்து 5வருடம்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தீர்வை செலுத்தியிருந்தால் அரசின் சார்பில் பட்டா வழங்கப்படும் தற்போது அதை நிறுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்ததால் பலர் பாதிக்கப்படுகின்றன. இதை வருவாய் துறை மூலம் அரசு கவனத்திற்கு எடுத்துச்சென்று ஏழை எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். என்று கோரிக்கை வைத்துள்ளனர். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஓன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் பேசுகையில் ஊராட்;சி பகுதியில் மின்விளக்குகள் அமைப்பதை போல் ஒன்றிய குழு சார்பில் மின்விளக்கு அமைப்பதற்கு வழிமுறைகள் எதுவும் உள்ளதா என்ற கேள்விகளுக்கு அதிகாரிகள் செய்து கொடுக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2023 24ம் ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மாணியம் வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சி புதிய முனியசாமிபுரம், 1வது குறுக்குத்தெரு, பேவர்பிளாக் சாலை, முனியசாமிபுரம் தெரு தார்சாலை அமைத்தல், திம்மராஜபுரம் வடக்கு மற்றும் கிழக்கு தெருவில் 69 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல், 100 வீடுகளுக்கு வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல், ராமசாமிபுரம் கிழக்கு மற்றும் வடக்கு வீட்டு குடிநீர் குழாய் அமைத்தல், உமரிக்கோட்டை கல்லம்பரம்பு கிராமத்தில் 110 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் விஸ்தரிப்பு செய்தல், மாப்பிள்ளையூரணி கீழ அழகாபுரி, வேளாங்கன்னி நகர், மேல அழகாபுரி, குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் விஸ்தரிப்பு, வர்த்தக ரெட்டி பட்டியில் சாலை அமைத்தல்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குமாரகிரி ஊராட்சி மெயின் பஜாரில் பம்பு அறை மற்றும் கழிவுநீர் அமைப்புகள் அமைத்தல், கூட்டுடன் காடு மேல கூட்டுடன் காடு கீழத்தெருவில் வடிகால் அமைத்தல், நடுகூட்டுடன் காடு எஸ்சி காலணியில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், தளவாய்புரத்தில் சமுதாய சுகாதார வாளாக கட்டிடம் அமைத்தல், 2023 24 ஒன்றிய பொதுநிதியிலிருந்து தளவாய்புரம் ஊராட்;சி மேலத்தெரு அக்னிமுத்தம்மாள் வீட்டிலிருந்து மேற்கு முனியசாமி வீடு வரை கழிவுநீர் கால்வாய் அமைத்து பேவர்பிளாக்சாலை அமைத்தல், மகிழ்ச்சிபுரத்தில் சுடுகாடு சாலையில் இருந்து கிழக்கு தனலட்சுமி வீடு வரை பேவர்பிளாக் சாலை அமைத்தல்,
திம்மராஜபுரம் வணிக வளாகத்திலிருந்து கிழக்கு ஆதிதிராவிடர் தெருவரை பேவர்பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு, தளவாய்புரம், திம்மராஜபுரம், மாப்பிள்ளையூரணி, பகுதியில் கைபம்பு அமைத்தல், உமரிக்கோட்டை திம்மராஜாபுரம், குமரகிரி, கட்டாளங்குளம், மறவன்மடம், அய்யனடப்பு, முடிவைதானேந்தல் ஆகிய பள்ளிகளில் ஸ்மாட் வகுப்பு அறைகள் அமைத்தல், சேர்வைகாரன்மடம் கூட்டுடன்காடு மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ்பாலன், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரி, தமிழ்செல்வி, செல்வராணி, தினகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், பொறியாளர் பணி மேற்பார்வையாளர்கள் முத்துராமன், சுப்பிரமணியன், அலுவலர்கள் மணிகண்டன், பொன்முருகன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.
Comments