ஓட்டப்பிடாரத்தில் 500 கபடி வீரர்களை சந்திக்க அண்ணாமலை அவர்கள் திட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் 500 கபடி  வீரர்களை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக மாவட்டத் துணைத் தலைவர் திருமதி முத்துமாரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மாமன்னன் வீரன் சுந்தரலிங்கம்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக  சொல்லப்படுகிறது ஆனால் அது இன்னும்  உறுதி செய்யப்படவில்லை. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

என் மண் என்  மக்கள்  ஊழலுக்கு எதிரான நடைபயணம் ராமநாதபுரத்தில் வருகிற 28 ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வந்தடைகிறார். பின்னர் மாலை புதியம்புத்தூர் வரவேற்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார் .

ஜூலை 28 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபயணத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை  தொடங்கி வைக்கிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments