பன்னாட்டு அரிமா சங்கம் 324 டி சார்பாக சலுகை விலையில் மருந்தக விற்பனையகம் மற்றும் டயாலிசிஸ் மையம்!!

பன்னாட்டு அரிமா சங்கம் 324 டி சார்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சலுகை விலையில் மருந்தக விற்பனையகம் மற்றும் டயாலிசிஸ் மையம் போன்ற புதிய சேவை திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளதாக 324 டி மாவட்ட அரிமா சங்க ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு அரிமா சங்கம் 324 டி (Cabinet Installation) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்பு விழா கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில்  நடைபெற்றது. சக்சஸ் 2023 எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் மாவட்ட ஆளுநர் மோகன் குமார் மற்றும் கன்வென்ஷன் கமிட்டி உறுப்பினர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதிய அமைச்சரவை நிர்வாகிகளாக முதல் நிலை ஆளுநர் சண்முக சுந்தரம் இரண்டாம் நிலை ஆளுநராக தினகரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பன்னாட்டு இயக்குனர் மகேஷ் பாஸ்குவால், கௌரவ அழைப்பாளராக முன்னால் பன்னாட்டு இயக்குனர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சரவை நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்களை  முன்னால்  பன்னாட்டு இயக்குனர் சம்பத் மற்றும் உடனடி முன்னால் மாவட்ட ஆளுநர்  ஜான் பீட்டர் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தில் கடந்த காலங்களில் சிறந்து செயல்பட்ட முன்னால் ஆளுநர்கள், நிர்வாகிகள், உறுப்பனர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், அவர்,324 டி மாவட்ட அரிமா சங்கத்தின் கீழ் உள்ள அரிமா சங்கங்களின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், குறிப்பாக இந்த ஆண்டு புதிய சேவை திட்டங்களாக ஒவ்வொரு பகுதியிலும் சலுகை விலை மருந்தகங்களை துவக்க உள்ளதாகவும், அதே போல காளப்பட்டி நேரு நகர் பகுதியில் சலுகை கட்டணத்தில்  டயாலிசிஸ் மையம்  துவக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து தற்போது செயல்படித்தப்பட்டு வரும் சேவை திட்டங்களான பசிப்பிணி போக்குவது, குழந்தைகள் புற்றுநோய், கண்ணொளி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரிழிவு நோய், போன்றவற்றில் விழிப்புணர்வு மற்றும் செயல்திட்டங்களை அதிகம் செயல்படுத்த உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments