தனியாருக்கு தாரைவாக்கும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
நிலத்தை, நீர்நிலைகளை, தனியாருக்கு, தாரைவாக்கும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ. திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலை கையெழுத்து இயக்கம் பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஏப்ரல் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்கள்) சட்டம் 2023 என்ற சட்டத்தை எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் பலவிதமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எந்தவொரு நிலத்தையும் சிறப்பு திட்டங்களுக்காக அரசு நினைத்தால் எடுத்துக் கொள்ளலாம் என்று வரம்பற்ற அதிகாரத்தை அரசுக்கு அளிக்கிறது. 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை தேவைப்படும். தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்காக இச்சட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப் படுத்தப்படும். அதாவது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இத்தகைய சட்டத்தை இயற்றி இருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இச்சட்டம் நடைமுறைப்படுத்தினால். நீர்நிலைகள் இதற்கான நீர் பிடிப்பு பகுதிகள். நீர்வழிப் பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும். பொதுமக்கள் விவசாயிகளுக்கு நீர்நிலைகள் மீது உள்ள உரிமை பறிபோகும். பல்வேறு துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் அரசு எடுத்துக் கொள்வதால் பொது இடம் என்ற ஒன்றே கிராமங்களில் இருக்காது இதனால் கிராமங்களில் பொது மக்களின் தேவைக்கான நிலம் என்பது கிடையாது.
தனியாருக்கு சொந்தமான நிலங்களும் அரசால் எடுத்துக் கொள்ளப்படும். அரசு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த ஏற்கனவே பல சட்டங்கள் உள்ள நிலையில் இந்த புதிய சட்டம் தேவையில்லை. எனவே நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023ஐ தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரத்தில் நடைபெற்றது.
இந்த பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ராகவன்,மாவட்ட செயலாளர் புவிராஜ், தாலுகா பொருளாளர் வேல்முருகன் , தாலுகா குழு உறுப்பினர் மொட்டையசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments