கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில், சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது!!

இந்திய கிராமப்புற மக்கள் ஆரோக்கியம் மற்றும் தொற்றாத நோய்களின் சவால்கள் மற்றும் கட்டுபடுத்தும் முறைகள் எனும் தலைப்பில்,கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனையில், சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய கிராமப்புறங்களில் தொற்றாத நோய்கள் உருவாக்கும் சவால்களும் அவற்றைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளும் என்ற தலைப்பில் கேஎம்சிஹெச் மருத்துவமனையில்  சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள . இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் துவக்க விழாவில்,தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. நாராயணசாமி மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஜே. அமலோற்பவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் ரிசர்ச் பவுண்டேசன் தலைவர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் ஆகியோர்  கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டனர்.இதில் பேசிய கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி, இருதய நோய், கல்லீரல் நோய், நீரிழிவு, புற்றுநோய், மூச்சுக்குழாய் நோய் முதலான தொற்றாத நோய்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிகம் இல்லை என்ற கருத்து மாறி, உள்ளதாக குறிப்பிட்ட அவர், கிராமப்புற மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்திட பிரத்யேக கவனம் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள ஃபிராமிங்ஹாம் மாடலைப் போல இந்திய மக்களுக்கான தொற்று நோய் குறித்த தகவல்களை சேகரிப்பதிலும் உருவாக்குவதிலும் கேஎம்சிஹெச் ஆராய்ச்சிக் கட்டளை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.கருத்தரங்கின் துவக்க விழாவில்  பேசிய மருத்துவர்கள், தொற்றாத நோய்கள் மற்றும் கல்லீரல் நோய் தொடர்பாக கிராமப்புற பகுதிகளில் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டுவதாகவும்,இதுபோன்ற கருத்தரங்குகள் இத்துறையில் உயர்தர ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில்,பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்கள் பேராசிரியர் மித்யுக்ஸ் ஜில்லஸ், , டாக்டர் ஷியாம் குமார் ஸ்ரீராம், டாக்டர்  சுந்தரேசன், பேராசிரியர்  பிரதீப், ; டாக்டர் சிவபிரகாஷ் ராமலிங்கம்,டாக்டர் தாமஸ் அலெக்ஸாண்டர், பேராசிரியர் அங்கயற்கண்ணி, டாக்டர் பெருந்துறை தண்டபாணி, டாக்டர் இம்மானுவல் ஜில்வேக்ஸ் பிரபு, மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவர்கள்  வேல்முருகன்,  மோகன்ராஜ், மனோஜ்குமார், பேராசிரியர் சீதாராமன், பேராசிரியர் ஜீவிதன்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments