டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பாக பீளமேடு ஹோப்ஸ் காமராஜர் சாலையில் உருவாகி வரும் மெகா சிட்டி!!
டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சார்பாக பீளமேடு ஹோப்ஸ் காமராஜர் சாலையில் உருவாகி வரும் மெகா சிட்டி புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கான துவக்க விழா நடைபெற்றது.
கோவையில் 92 வருடங்கள் பாரம்பரியமான கே.ஜி.குழுமத்தின் அங்கமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 2500 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் புதிய திட்டமான மெகா சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கோவை அவினாசி சாலை மற்றும் சிங்காநல்லூரை இணைக்கும் காமராஜர் சாலையில் உருவாகி வருகிறது.இரண்டு டவர்களாக உருவாகி வரும் இந்த வளாகத்தில் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய இருநூறு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மெகா சிட்டி அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கான விற்பனை துவக்க விழா மெகா சிட்டி வளாகத்தில் நடைபெற்றது..விழாவில் சிறப்பு விருந்தினராக இ.எஸ்.ஐ.மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் சஞ்சனா விஜயகுமார், ஸ்ரீஹரி பிரசாத், மற்றும் விற்பனை பிரிவு துணை தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் கோவையில் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ளதாகவும், தற்போது துவங்கி உள்ள மெகா சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் விரைவாக வீடுகள் கட்டி வழங்க உள்ளதாக கூறிய நிர்வாகத்தினர், இரண்டு டவர்களாக அமைக்கப்பட்டு வரும் இதில்,200 வீடுகளை கட்டி வருவதாகவும் 20 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய வசதிகளை இந்த வளாகத்தில் உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பாக,அனைவருக்கும் சொந்த வீடு எனும் நோக்கத்தில் டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் தரமான வீடுகளை கட்டி விற்பனை செய்து வருவதே எதிர்கால திட்டம் என நிர்வாக இயக்குனர் சஞ்சனா விஜயகுமார் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments