செக்காரக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செக்காரக்குடியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்பு குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் மூலமாக கால்நடைப் பராமரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
பின்னர் விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செக்காரக்குடியில் கால்நடை பராமரிப்பு துறை கிளை அமைக்கப்படுகிறது, திருநெல்வேலியில் நாட்டுக் கோழி ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அஜய் சீனிவாசன் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு. செல்லபாண்டியன் சார் ஆட்சியர் திரு கௌரவ் குமார், வட்டாட்சியர் திரு. சிவகுமார்,
மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.பிரம்மசக்தி மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு.உமரிசங்கர் ஆவின் சேர்மன் திரு.சுரேஷ்குமார் கருங்குளம் யூனியன் சேர்மன் திருமதி.கோமதி ராஜேந்திரன் திரு.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சி.எஸ்.டி செந்தூர் மணி
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ராமஜெயம் மாவட்ட பிரதிநிதிகள் திரு.பொன்கணி திரு.கருப்பசாமி மாவட்ட கவுன்சிலர் திரு.செல்வகுமார் ஒன்றிய கவுன்சிலர்கள் திருமதி.ராதா மாரியப்பன் திரு.முருகன் செக்கரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ராமலட்சுமி, இளைஞரணி திரு.லட்சுமணன் திரு.கருப்பசாமி கிளைச் செயலாளர்கள் திரு.சிவஞானம் திரு.ஐஸ் மாரியம்மன், கூட்டுறவு சங்க தலைவர் ஐய்யம்பெருமாள், மற்றும் அரசு அலுவலர்கள் கால்நடை பராமரிப்பாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments